மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை - கூடல்நகர், மதுரை- திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, செப். 18-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பகுதியாக ரத்து
ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் (16845) செப். 18-ஆம் தேதி முதல் அக். 7-ஆம் தேதி வரை (செப். 24, அக். 1 தவிர) திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். திண்டுக்கல் - செங்கோட்டை சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும்.
மறுமார்க்கத்தில், செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் (16846) செப். 19-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை (செப். 25, அக். 2 தவிர) திண்டுக்கல்லிலிருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு, ஈரோடு செல்லும்.
மாற்றுப் பாதையில்
செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) செப். 19 முதல் அக். 7 வரை (செப். 25, அக். 2 தவிர) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும்.
குருவாயூரிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (16128) செப். 23, 25, 26, 27, அக். 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும். நாகர்கோவிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரயில் (16352) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி- ஹௌரா அதிவிரைவு ரயில் (12666) செப். 28-ஆம் தேதியும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும்.
நாகர்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படும் நாகர்கோவில் - கச்சேகுடா விரைவு ரயில் (16354) செப். 28-ஆம் தேதி திண்டுக்கல், கரூர் வழியே இயக்கப்படும். மதுரையிலிருந்து காலை 11.55 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானர் விரைவு ரயில் (22631) செப். 26, அக். 3 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“we