மொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை

ரயில் டிக்கெட்டை மொபைல் ஆப் மூலமாக எடுத்தால், கட்டண சலுகை கிடைக்கிறது. இந்திய ரயில்வே மதுரை கோட்ட அதிகாரி இந்த தகவலை வெளியிட்டார்.

ரயில் டிக்கெட்டை மொபைல் ஆப் மூலமாக எடுத்தால், கட்டண சலுகை கிடைக்கிறது. இந்திய ரயில்வே மதுரை கோட்ட அதிகாரி இந்த தகவலை வெளியிட்டார்.

இந்திய ரயில்வே மதுரை கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘விரைவு ரயில் மற்றும் பாசஞ்சர் ரெயிலில் பயணிப்போர் செல்போனில் ‘ஆப்’ வாயிலாக முன் பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இதன்வாயிலாக 3 சதவீதம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயன்பெற்று வருகின்றனர்.

ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை அவர்கள் ஆர் வாலேட், கிரெடிட்- டெபிட் கார்டுகள் வாயிலாகவோ, அல்லது பயணசீட்டு அலுவலகத்திலோ செலுத்தி வருகின்றனர். இதற்காக மத்தியஅரசு கூடுதல் சேவை கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்தநிலையில் ‘ஆர் வாலெட்’ மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஆர் வாலெட்டில் பணம் செலுத்தும்போது, பயனாளிகளின் கணக்கில் 5 சதவீதம் போனஸ் தொகை வரவு வைக்கப்படும். உதாரணமாக பயணி ஒருவர் ஆர் வாலெட்டில் 1000 ரூபாய் பணம் செலுத்தினால், அவரின் கணக்கில் ரூ.1050 வரவு வைக்கப்படும். செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close