மீண்டும் தமிழில் ரயில் டிக்கெட்டுகள்!

இன்று முதல் ரயில் டிக்கெட்டில் ஊரின் பெயர்கள் இடம்பெறும்

தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுக்களில் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பயணம் ஆரம்பிக்கும் இடம் மற்றும் முடியும் இடம் குறித்த தகவல் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று முதல் தமிழிலும் ஊரின் பெயர்கள் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில் பயணியர் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி கூறுகையில், “இது அன்னை தமிழுக்கு தலை மகனின் காணிக்கை. நீண்ட முயற்சிக்குப் பிறகு ரயில்வே டிக்கெட்டுகளில் தமிழ் வந்துவிட்டது. முயற்சி திருவினையாகியது என்றுதான் சொல்ல வேண்டும்.
தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறும். இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று முதல் இரண்டு தினங்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் சோதனை நடைபெறும். அதன் பிறகு இவ்வார இறுதி முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close