அர்ச்சகர்களாக முறையாக பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது..
வருங்காலத்தில் அர்ச்சகர்களாக விரும்புபவர்கள் அரசு நடத்தும் மையங்கள் அல்லது பிற பாடசாலைகளில் முறையான பயிற்சியை முடித்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் மாநிலத்தில் உள்ள 38 கோவில்களில் புதிய அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அர்ச்சகராக நியமிக்க தகுதியான ஒருவர் 'ஆகம சாஸ்திரங்களில்' சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. .
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன், இது தொடர்பான வேறு வழக்கு உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் நிலுவையில் இருப்பதால், இம்மனுவை அவற்றோடு சேர்த்து விசாரிக்க கோரிக்கை வைத்தார்.
இந்த சமர்ப்பித்தலைப் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை முதல் பெஞ்சிற்கு அனுப்புமாறு பதிவகத்திற்கு உத்தரவிட்டது.
மனுதாரர் தரப்பில், ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் நடைபெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்றும், சிறு வயதிலிருந்தே மத குருக்கள் மூலம் பயிற்சி பெறும் ‘சிவாச்சாரியர்களை’ அர்ச்சகர்களாக நியமிப்பதில் இருந்து அகற்றுவதாக தற்போதைய நடைமுறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிவாச்சாரியர்கள் ஒரு தனி பிரிவாக உள்ளனர், பழங்காலத்திலிருந்தே, சிவாச்சாரியார் சிவனின் அடிமைகள் என்று நம்பப்பட்டது, ஆகமங்கள் மற்றும் வேதங்களின்படி சைவ கோவில்களில் பூஜை செய்வது அவர்களின் முதன்மையான கடமை என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
ஆகமங்களில் அனுபவமுள்ள சிவாச்சாரியர்கள் எந்த சான்றிதழ் படிப்பையும் மேற்கொள்வதில்லை.
மாறாக, அவர்கள் சிறு வயதிலேயே தங்கள் பிரிவின் குருவிடம் இருந்து திக்ஷாவைப் பெறுகிறார்கள் மற்றும் குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு கடுமையான வேதக் கல்வியைப் பெறுகிறார்கள் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil