Advertisment

சென்னை- திருப்பதி ரயில் சேவை 15 நாட்கள் ரத்து: என்ன காரணம்?

தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சென்னை- திருப்பதி இடையே செப்டம்பர் 28 முதல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Diwali train ticket booking starts tomorrow

ரேணிகுண்டா பகுதியில் தண்டவாளம் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால்  சென்னை- திருப்பதி இடையே செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை 15 நாட்கள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Advertisment

வண்டி எண் 16057 எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்  சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து. 

வண்டி எண்  16054 திருப்பதி- எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து. 

வண்டி எண்  16053 எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து.
வண்டி எண்  16058 திருப்பதி- எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து. 
வண்டி எண் 16204, 16203 ரயில்கள் சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் இரு மார்க்கங்களில் ரத்து செய்யப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment