பாதை பராமரிப்பு பணி: திருச்சி - மதுரை மார்க்க ரயில் சேவை மாற்றம்

பாதை பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை - திருச்சி - மதுரை மார்க்கத்தில் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாதை பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை - திருச்சி - மதுரை மார்க்கத்தில் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Trains cancelled diverted Madurai trichy mayiladuthurai tamil news

மதுரை - திருச்சி -மயிலாடுதுறை வழியாக செல்லப்படும் ரயில்களின் பயண பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை - திருச்சி -மயிலாடுதுறை வழியாக செல்லப்படும் ரயில்களின் பயண பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

மயிலாடுறை பிரிவில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், மன்னாா்குடி - மயிலாடுதுறை - மன்னாா்குடி பயணிகள் ரயில்களானது (06403, 06404) வரும் 7, 22- ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (06646) வரும் 13- ஆம் தேதி மயிலாடுதுறை - குத்தாலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - குத்தாலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

விழுப்புரத்திலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (06689) வரும் 7, 22-ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - ஆனதாண்டவபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது விழுப்புரம் ஆனதாண்டவபுரம் இடையே மட்டும் இயக்கப்படும்.

Advertisment
Advertisements

இதேபோல், மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கமான தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16848) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 5ம் தேதி, 7ம் தேதி, 19ம் தேதி, 20ம் தேதி, 21ம் தேதி, 23ம் தேதி, 26ம் தேதி, 27ம் தேதி, 30ம் தேதி, ஜனவரி மாதம் 3, 6 மற்றும் 8 ஆம் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அந்த பாதையில் மானாமதுரை மற்றும் காரைக்குடியில் இந்த ரயில் நின்று செல்லும்.

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 19-ந் தேதி, 26-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மானாமதுரையில் இந்த ரயில் நின்று செல்லும். 

கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக மேற்குவங்க மாநிலம் ஹவுரா வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666) டிசம்பர் 21ம் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். 

அதே போல் குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) 20ம் தேதி, 25ம் தேதி, அடுத்த மாதம் 2 மற்றும் 5ம் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். இந்த ரயிலும் மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். 

மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் செல்லும் வாராந்திர அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22631) டிசம்பர் 26ம் தேதி மதுரையில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai Train Trichy Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: