senior citizens : மூத்த தம்பதியினர் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து மற்றும் பட்டா எழுதிக் கொடுக்கையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், பிரிவு 23 ன் கீழ் பட்டாவில் தங்கள் பெற்றோர்களின் அனைத்து விதமான அடிப்படை மற்றும் சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்யப்படும் என்ற உட்கூறு விதிகள் இடம்பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்தது.
சொத்துக்களின் உரிமையை பெற்றவர்கள் இதை செய்ய மறுத்தால், மேற்கண்ட சட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தானமாக/ அன்பளிப்பாக எழுதி வழங்கப்பட்ட நிலச்சொத்துக்கள் குறித்த உரிமை மாற்றம் ரத்து செய்யப்படும் (அல்லது) மோசடி என்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி எஸ். வைத்தியநாதன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கான பராமரிப்புத்தொகை பெற தகுயுதியுடையவராகிறார். நிலச்சொத்துக்கள் பரிமாற்றம் செய்யும் போது, பிரிவு 23 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை துணை பதிவாளர் / பதிவாளர் உறுதிப்படுத்த வேண்டும். பட்டாவில் மேற்கூறப்பட்ட உட்கூறுகள் இணைக்கப்படாவிட்டால், மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தை அணுக முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தினர்.
மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், பெற்றோர் மற்றும் மூத்த குத்மக்களிடமிருந்து சொத்துக்களின் உரிமையைப் பெற்றவர்கள் வயதான பெற்றோரை வாழ்நாள் முழுவதும் கைவிடாமல் பாதுகாத்து, பரமாரித்து வருவதற்கு கடமைப்பட்டவர்கள். இச்சட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை ஆகிய செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் அதிகபட்சமாக ரூ. 10, 000 வரை பராமரிப்பு தொகை பெற வழி வகை செய்யப்படுகிறது. இச்சட்டம், கடந்த 2007ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil