scorecardresearch

மாற்று பாலின சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்க நடவடிக்கை – அமைச்சர் மா. சுப்ரமணியன்

அவர்களின் பொருளாதார சமூக பின்னணியை உணர்ந்து தற்போது தமிழகத்திலேயே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள போதுமான மருத்துவமனைகள் வசதிகள் உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாற்று பாலின சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்க நடவடிக்கை – அமைச்சர் மா. சுப்ரமணியன்

Transgender clinics : திருநர் சமூகத்திற்கு தொடர்ந்து பல்வேறு வகையான திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இலவச பேருந்து பயணம் துவங்கி, வேலை வாய்ப்புகள், கல்விக்கு கடன் வசதி போன்ற அனைத்து வகையான அதிகாரம் அளிக்கும் திட்டங்களையும் அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது திமுக அரசு.

ஆனாலும் மனதால் தான் ஒரு பெண் என்று உணரும் நபர்கள் தங்களின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக தொடர்ந்து மும்பை அல்லது தாய்லாந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களின் பொருளாதார சமூக பின்னணியை உணர்ந்து தற்போது தமிழகத்திலேயே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள போதுமான மருத்துவமனைகள் வசதிகள் உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆணாய் சென்று பெண்ணாய் திரும்பியவருக்கு அரசு வேலை; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இதற்காக தனி அலகு ஒன்றை திறந்து வைத்து பேசிய அவர், இதுவரை 207 நபர்களுக்கு இங்கே பாலின மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது என்றும் அதில் 44 நபர்கள் இலவசமாக சிகிச்சை பெற்றனர் என்றும் கூறியுள்ளார். குறுகிய காலத்தில் ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இது போன்ற சிகிச்சைகளை இதர அரசு மருத்துவமனைகளும் திருநர் சமூகத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இந்த சிகிச்சை இதுவரை 40 பேருக்கு, ப்ளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் பி.சுரேஷ் தலைமையிலான குழு வாழங்கியுள்ளது என்று நேற்றைய நிகழ்வில் மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்னவேல் குறிப்பிட்டார்.

ஆணாக பிறந்து பெண்ணாக மாறும் ஆண்களுக்கு மார்பகங்களை பொருத்தும் சிகிச்சையும் விரைவில் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நிகழ்வின் போது குறிப்பிடப்பட்டிருந்தது. சுகதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் மற்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் புதிதாக துவக்கி வைத்த பின்னர் இத்தகைய அறிவிப்புகள் வெளியாகின.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Transgender clinics to come up in many government hospitals in tamil nadu says minister ma subramanian

Best of Express