ஓடும் ரயிலில் இளைஞரை கொலை செய்த சம்பவம்: திருநங்கை தற்கொலை முயற்சி!

பிச்சை போடாத இளைஞரை, ஓடும் ரயிலிருந்து தள்ளி கொன்ற திருநங்கைகளில் ஒருவர், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல பொக்காரோ எக்ஸ்பிரஸில் சென்றுக் கொண்டிருந்த, சத்யநாராயணாவை திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தனர். அவர்கள் பிச்சை கேட்டபோது, சத்யநாராயணா பணம் தர மறுத்ததால், கூட்டமாக வந்த திருநங்கைகளில் ஒருவரான சுவேதா அவரை காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

இதனால், சத்யநாராயணா, வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பணம் தர மறுத்ததால் இளைஞரை திருநங்கைகள் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுக் குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் காவல் துறையினர், கொலை செயலில் ஈடுப்பட்ட திருநங்கைகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்தனர்.

இந்நிலையில், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த திருநங்கை சுவேதா, போலீஸ் விசாரணைக்கு பயந்து, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சுவேதாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மயக்கம் தெளிந்த பின்பு, சுவேதாவிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

இதனிடையில், செய்தியாளர்களிடம் பேசிய சுவேதாவின் ஆதரவான திருநங்கைகள் சிலர், சத்யநாராயணாவை அவர் தள்ளி விடவில்லை என்றும், போலீசார் உண்மையான குற்றவாளியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

×Close
×Close