Advertisment

நாங்கள் நடத்தும் உணவகத்திற்கு வருவீர்களா? சமூகத்தில் மாற்றத்தை ஏதிர்பார்க்கும் திருநங்கை ஷைனா பானு

சமூக வலைத்தளங்களில் உணவகங்களை விமர்சித்து போடுவதின் மூலமாக, ஷைனா பானுவின் (வயது 36) பிரபலமான 'ட்ரான்ஸ்ஜெண்டர் டேஸ்ட்டி ஹட்' உணவகம் தற்போது பலபேரால் பேசப்பட்டது.

author-image
Janani Nagarajan
New Update
நாங்கள் நடத்தும் உணவகத்திற்கு  வருவீர்களா? சமூகத்தில் மாற்றத்தை ஏதிர்பார்க்கும் திருநங்கை ஷைனா பானு

சென்னை எழும்பூரில் 'டிரான்ஸ்ஜெண்டர் டேஸ்டி ஹட்' என்ற உணவகத்தை நடத்தி வரும் ஷைனா பானு,  மார்ச் மாதம் 2021 ஆம் ஆண்டு கடை வைத்தார். MSSW (Madras School of Social Work)இன் இரண்டாவது வாயிலில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த கடைக்கு ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அரிதாக இருந்தது. பின்பு, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியப்பின் மக்களின் வருகை அதிகரித்து, சென்னையின் பிரபல கடையாக உருவெடுத்துள்ளது.

Advertisment

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் காரணத்தினால் மக்கள் பொருளாதார அடிப்படையிலும், வாழ்வாதாரத்திலும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதிலும் தொழில்முனைவோரின் நிலைமையை பற்றி சொல்ல தேவை இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சமூக வலைதளத்தின் உதவியால் சில தொழிலாளிகளுக்கு கவனம் அளிக்கப்பட்டு முன்னேற முடிந்தது.

மூக வலைத்தளங்களில் உணவகங்களை விமர்சித்து போடுவதின் மூலமாக, ஷைனா பானுவின் (வயது 36) பிரபலமான 'ட்ரான்ஸ்ஜெண்டர் டேஸ்ட்டி ஹட்' உணவகம் தற்போது பலபேரால் பேசப்பட்டது.

இதைப்பற்றி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பேசினோம், அப்போது ஷைனா பானு கூறியதாவது:

"நான் பத்தாவது வரை படித்திருக்கிறேன். இந்த கடை போடுவதற்கு முன்னால்  நான் பல நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன்; அக்கவுண்டண்ட், ரிசப்சனிஸ்ட், டாலி ஆபரேட்டர் ஆகிய பணிகளில் பணிபுரிந்தேன்.

ஆரம்பத்தில் தள்ளு வண்டியில் சூப், குழி பணியாரம், மோமோ, சிக்கன் கெபாப் வைத்து கடை நடத்தினேன்; ஆனால் பல இடையூர்களின் காரணமாக அதை கைவிடும் நிலை ஏற்பட்டது.

பிறகு, எங்கள் குழுவின் (செம்பருத்தி திருநங்கைகள் சுயஉதவிக்குழு) உதவியால் இந்த கல்லூரியின் நிறுவனத்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது, கடை போடும் ஒப்புதல் கிடைத்தப்பின்பு தான் நிம்மதியாக இருந்தது. இங்கு ஆரம்பத்தில் வெரைட்டி ரைஸ், ஸ்னாக்ஸ் ஆகியவை விற்றோம், தற்போது வெஜ் பிரியாணி போன்றதும் சேர்த்துக்கொள்கிறோம்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு போட்டபின்பு மக்களின் வருகை இல்லாததால் பெருமளவு பாதிக்கப்பட்டோம். ஊரடங்கு தளர்வுகள் போட்ட பின்பும் மக்களுக்கு எங்களைப்பற்றி தெரியவில்லை, தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை. எங்கள் கடையை கடந்து சென்றாலும், திருநங்கையின் கடை என்ற காரணத்தால் தயங்குவார்கள்,அல்லது இங்கு உண்ணுவதை

தவிர்த்துவிடுவார்கள்.

சமீபமாக சமூக வலைத்தளத்தில் எங்கள் கடையைப்பற்றின பதிவு வெளியானது: 'ஆண்களோ, பெண்களோ உணவகத்தை நடத்தினால், இந்தச் சமூகம் அதை ஏற்றுக்கொள்ளும். ஆனால் திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகத்திற்கு நீங்கள் வருவீர்களா? அப்படியென்றால் நாங்கள் கடின உழைப்பால் சம்பாதித்தும் இந்த சமூகம் ஏன் எங்களை குறை கூறுகிறது?'

அதன் பிறகு மக்களின் வருகை அதிகரித்தது. பத்து நாட்களுக்கு முன்பு கூட மக்கள் கூட்டம் கூட்டமாக எங்கள் உணவகத்திற்கு வருகை தந்தார்கள். ஆனால் இப்போது மறுபடியும் வாடிக்கையாளர்கள் வருவது குறைந்துவிட்டது.

சமூகத்திற்கு நான் கேட்கும் கேள்வியே, நான் எதற்காக தொடர்ந்து என்னைப்பற்றி மக்களுக்கு தெரிவித்துக்கொண்டே  இருக்கவேண்டும் என்பது தான். நாங்கள் தொடர்ந்து எங்களை நிரூபித்துக்கொண்டே இருந்தால் தான் சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை; மக்கள் எங்களை அவர்களுள் ஒருவராக நினைத்தால் தான் இந்த ஒடுக்குமுறைக்கு விடிவுகாலம் பிறக்கும். 

பல ஆண்டுகளாக ஒதுக்கிவைக்கப்படுவதற்குப் பிறகு, நான் இறுதியாக சொந்தமாக ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன், அது எளிதானது அல்ல; இப்போது நான் இந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க விரும்புகிறேன்," ஷைனா கூறினார்.

இந்த கடைக்கு செல்ல நினைத்தால்: https://goo.gl/maps/SkKz1BX3V5sxbEGQ8

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Transgenders
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment