வருகின்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள் (Express photo)
ஜனவரி மாதம் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக எட்டு காளைகளை மதுரையில் இரண்டு திருநங்கைகள் பயிற்சி செய்து வருகிறார்கள்.
Advertisment
மதுரை மாவட்டத்தின் பொட்டப்பனையூரில், ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு என்பது காளைகளை அடக்கும் விளையாட்டு ஆகும், இது பாரம்பரியமாக பொங்கல் பண்டிகையின்போது நடக்கும் நிகழ்வு.
உரிமையாளர்களில் ஒருவரான கீர்த்தனா கூறுகையில், "நான் எட்டு ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகிறேன். வரும் 2023ஆம் ஆண்டு தை பொங்கலில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக நான் மாடுகளை தயார்படுத்தி வருகிறேன்.
கடந்த நான்கு வருடங்களாக ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்த்து தயார்படுத்தி வருகின்றேன். 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு, காளைகளை வளர்க்க விருப்பம் வந்தது. ஆகையால், ஒரு கன்றுக்குட்டியை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன்.
குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குக் கல்வி கற்பித்து அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக உழைப்பார்கள். ஆனால் எனக்கு குழந்தைகள் இல்லாததால் இந்த ஜல்லிக்கட்டு காளைகளை எனது குழந்தைகளாகவே பார்க்கிறேன். அவர்கள் வெற்றி பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் எப்படி தங்கள் பெற்றோரை பெருமைப்படுத்துகிறார்களோ, அதே போல இந்த காளைகள் என்னை பெருமைப்படுத்துகின்றன", என்று கூறுகிறார்.
இதை தொடர்ந்து அக்ஷயா கூறுகையில், "ஈரமான மண்ணில் கொம்புகளை தோண்டி, காளைகளுக்கு தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. நீச்சலுக்கும் அழைத்துச் செல்கிறோம். ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இது முக்கியமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த போட்டிக்காக இவ்வாறெல்லாம் பயிற்சி அளித்து வருகிறோம்", என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil