தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கைகள் தொடங்கிய ஹோட்டல்; பொதுமக்கள் வரவேற்பு

தமிழகத்தில் முதல் முறையாக முழுவதும் திருநங்கைகளால் நடத்தப்படும் ‘கோவை டிரான்ஸ் கிட்சன்’ என்ற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை பொதுமக்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

By: Updated: September 10, 2020, 06:57:42 PM

தமிழகத்தில் முதல் முறையாக முழுவதும் திருநங்கைகளால் நடத்தப்படும் ‘கோவை டிரான்ஸ் கிட்சன்’ என்ற உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை பொதுமக்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முதன்முறையாக கோவை, ஆர்.எஸ்.புரத்தில் திருநங்கைகள் ஒன்றிணந்து ‘கோவை டிரான்ஸ் கிச்சன்’ என்ற உணவகத்தை தொடங்கியுள்ளனர். இது தமிழகத்தில் திருநங்கைகளால் தொடங்கப்பட்ட முதல் உணவகம் என்று கருதப்படுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் பேசிய கோயம்புத்தூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் சங்கீதா, கோவிட் -19 காரணமாக அவர்களது சமூக உறுப்பினர்கள் பலரும் வேலைகளை இழந்துவிட்டதாகவும், இது அவர்களுக்கு சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டிய சூழலுக்கு தள்ளியது என்று கூறினார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக கேண்டீனை நடத்தி வரும் சங்கீதா, “சமையல் வேலை எங்களுடைய முதன்மையான வேலையாக இருந்தது. ஆனால், கோவிட் -19 காரணமாக, எங்கள் திருநங்கை சமூக உறுப்பினர்கள் பணிபுரிந்த பல உணவகங்கள் மூடப்பட்டன. அவர்கள் வேலையில்லாமல் இருந்தனர். எனவே, அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு சிறிய உணவகத்தை திறக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். கோவையில் திருநங்கைகள் சங்கம் மூலம், எங்களுடைய திருநங்கைகள் சமூகத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் இங்கு சேர்ந்துள்ளனர். உணவு தயாரித்தல், பேக்கேஜிங் மற்றும் டெலிவரி வரை சமையலறை முழுவதுமாக அவர்களால் வேலை செய்யப்படுகிறது” என்று கூறினார்.

திருநங்கைகள் நடத்தும் ஒரு ஹோட்டலுக்காக ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தது பற்றி சங்கீதா கூறுகையில், திருநங்கைகளுக்கு இடத்தை வாடகைக்கு அளிக்க பலர் தயாராக இல்லாததால் உணவகம் நடத்துவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய தடையாக இருந்தது என்று என்று கூறினார். “எங்களுடைய உணவகம் தமிழகத்தில் முழுமையாக திருநங்கைகளால் நடத்தப்படுகிற முதல் உணவகம் ஆகும். முதலில் எங்களுக்கு ஒரு இடத்தை வாடகைக்கு வழங்க மக்கள் தயங்கினர். அவர்களில் சிலர், இதற்கு முன்பு இதுபோல, செய்யப்படாததால், நாங்கள் எப்படி ஒரு உணவகத்தை நாங்களே நடத்தப் போகிறோம் என்று உறுதியாக தெரியவில்லை என்று சொன்னார்கள். ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஒரு வழக்கறிஞரின் உதவியுடன், ஆர்.எஸ்.புரத்தில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தோம்” என்று சங்கீதா கூறினார்.

சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எங்களுடைய உணவக ஊழியர்கள் கேட்டரிங் பணியில் பயிற்சி பெற்றுள்ளனர் என்று சங்கீதா கூறினார்.

எங்களுடைய உணவகத்துக்கு இதுவரை நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறிய திருநங்கை சங்கீதா, அவர்கள் இப்போது இரண்டாவது உணவகத்தை விரைவில் திறக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இது குறித்து சங்கீதா கூறுகையில், “பொதுமக்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தன. அவர்களின் ஆதரவுடன், நாங்கள் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிகிறது. நாங்கள் முதலில் மொத்த ஆர்டர்களைப் பெறத் தொடங்கினோம். தினசரி 15 கிலோ வரை பிரியாணி விற்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, வியாபாரம் தொடர்ந்து நல்ல லாபத்தை அளித்தால், எங்கள் திருநங்கை சமூக உறுப்பினர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்க இரண்டாவது உணவகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Transgenders started hotel covai trans kitchen state first transgender hotel

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X