நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற திமுக தொழிற்சங்க தொண்டர் அஜித் குமார்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.,வின் உறுப்பினர் அஜித்குமார் (46) திமுக கொடியுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
Advertisment
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பரசேரியை சேர்ந்த அஜித்குமார் 22 ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
தீக்குளிக்க முயன்ற திமுக தொழிற்சங்க தொண்டரிடம் போலீசார் சமாதானப் பேச்சு
இவர், 2003 ஆம் ஆண்டு இருசக்கர வாகன விபத்தில் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார், அதன் பின்பு பணிமனையில் உதவியாளராக பணியாற்றினார் பின்னர் இலகுவான வாகன ஓட்டுராகவும் பணிபுரிந்து வந்தார், அரசு சார்ந்த பல்வேறு வாகனங்கள் ஓட்டுனராகவும் பணியாற்றினார்.
Advertisment
Advertisements
கடந்த ஆண்டு தொழில்நுட்ப மேலாளர் திடீரெ ஸ்டோர் லாரி ஓட்டுனராக பணிபுரிய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார், ஆனால் தனது உடல்நிலை கருதி அந்த பணியில் செயல்பட முடியாது எனத் தெரிவித்து உள்ளார். இதற்காக ஆதாரங்களை அதிகாரியிடம் சமர்ப்பித்து உள்ளார். ஆனால் அவர் ஏற்க மறுத்த நிலையிலும் தனது தொழிற்சங்க உதவியுடன் மீண்டும் சிறு வாகனம் ஓட்ட பணி அமர்த்தப்பட்டார்.
தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி அஜித் குமார்
ஆனால் அந்த வாகனம் பழுதுபார்க்க அனுப்பியதால் அஜித்குமாரை கனரக வாகன ஓட்ட பயணித்துள்ளனர். இந்நிலையில் தன்னால் இயலாது என தெரிந்தும் கனரக வானம் ஓட்ட கட்டாயப்படுத்தி வந்துள்ளனர், இந்த தன்னிச்சையான போக்கை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியாள்ளார்.
எனினும், எந்த முடிவும் எட்டப்படாததால் குடும்பத்துடன் போக்குவரத்து பணிமனை முன்பு கடந்த மாதம் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். அப்போது அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும், காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், போக்குவரத்து நிர்வாகம் அஜித்குமாரின் இயலாமையை பொருட்படுத்தாமல் கனரக வாகன ஓட்ட கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த அஜித் குமார் தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அவரை அங்கிருந்த போலீசார் காப்பாற்றிவிட்டனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil