ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி: பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்!

சென்னையை தொடர்ந்து மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது

By: Updated: January 4, 2018, 06:56:02 PM

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருவதால் கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மாநகர பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையை தொடர்ந்து மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் பேருந்துகள் பணிமனைக்கு திரும்பி வருகின்றன.

இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பூந்தமல்லியில் இரண்டு அரசுப் பேருந்துகளை வழிமறித்த போக்குவரத்து ஊழியர்கள், வலுக்கட்டாயமாக பேருந்து ஓட்டுனர்களையும், பயணிகளையும் இறக்கிவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

More Details awaited….

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Transport employees salary increment talk govt bus drivers strikes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X