போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் அறிவிப்பு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளனர். 10 தொழிற்சங்கங்கள் சேர்ந்து நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தொ.மு.ச. அறிவித்துள்ளது. 2 வார நோட்டீசுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்தப்படும். ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். பேச்சுவார்த்தைக்குபிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மீண்டும் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

×Close
×Close