கரூரில் ஒரே நாளில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

transport minister mr vijayabaskar tested covid-19 positive, dmk mla senthil balaji tested coronaviurs positive, போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு கொரோனா, திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று, திமுக, அதிமுக, கொரோனா வைரஸ், mr vijayabaskar tested covid-19 positive, senthil balaji tested covid-19 positive, dmk mla senthil balaji

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனை வைரஸ் தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூயமைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் காவலர்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதே நேரத்தில், தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் வெண்டிலேட்டர் மூலம் நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியான நிலையில், வசந்தகுமார் எம்.பி.யின் மகன் விஜய் வசந்த் தனது தந்தை நலமுடன் இருக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Transport minister mr vijayabaskar tested covid 19 positive dmk mla senthil balaji tested coronaviurs positive

Next Story
தமிழகத்தில் ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 6,000ஐ தாண்டியது
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com