சாலையோர உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை; பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

நெடுஞ்சாலையோர உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை; பேருந்து பயணிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

Transport Minister Rajakannappan says heavy action against motels for serving poor quality food: பயணிகளுக்கு தரமற்ற உணவுகளை அதிக விலைக்கு வழங்கும் நெஞ்சாலையோர உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் உறுதியளித்துள்ளார்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது,

விக்கிரவாண்டியில் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து காலாவதியான மளிகைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள நெஞ்சாலையோர உணவகங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், ஜனவரி 11 முதல் 13ஆம் தேதி வரை 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரத்தில் ஒரு முன்பதிவு மையம் செயல்படுத்தப்படும்.

பண்டிகைக் காலங்களில், மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் எம்டிசி பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ), தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு CMBT ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

CMBT மற்றும் பிற பேருந்து நிலையங்களிலிருந்து நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கும் 24 மணி நேரமும் எம்டிசியால் ஃபீடர் சேவைகள் இயக்கப்படும்.

பயணிகள் தங்களுக்கான உதவி மற்றும் குறைகளுக்கு, 94450 14450 மற்றும் 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளின் அதிக டிக்கெட் கட்டணம் குறித்த புகார்களுக்கு, பயணிகள் 044 24749002 மற்றும் கட்டணமில்லா எண் 1800 4125 615 615 க்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, சென்னையில் இருந்து வெளியூர்களுக்குப் புறப்படும் கார்கள் மற்றும் பிற வாகனங்கள் பெருங்களத்தூருக்குப் பதிலாக திருக்கழுக்குன்றம் அல்லது ஸ்ரீபெரும்புதூர் வழியாக செங்கல்பட்டுக்கு வருமாறு போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Transport minister rajakannappan says heavy action against motels for serving poor quality food

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com