Advertisment

அ.தி.மு.க ஆட்சியில் டிரைவர்- கண்டக்டர் நியமனமே நடக்கவில்லை: அமைச்சர் சிவசங்கர்

அ.தி.மு.க ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது - திருச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy TNSTC

திருச்சி போக்குவரத்து கழக நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ், சிவசங்கர்

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம் மலைக்கோட்டை கிளையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா நடந்தது.

Advertisment

மேலும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை பணிமனை கிளையில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:- கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது. இன்றைக்கு அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு போக்குவரத்துக் கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது.

publive-image
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திருச்சியில் உரையாற்றியபோது

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர வேலை போக்குவரத்துக்கழகத்தில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதியத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறார். அதேபோன்று கடந்த ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு போக்குவரத்து கழகத்திற்கு முதல்வர் ரூ.1,500 கோடி வழங்கினார். தற்போது மகளிருக்கு இலவச கட்டணம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த தொகையையும் சேர்த்து நடப்பாண்டுக்கு ரூ.2,200 கோடி வழங்க இருக்கிறார். தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது.

publive-image
திருச்சி போக்குவரத்து கழக நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ், சிவசங்கர்

இதனால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்சினை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேபோன்று கடந்த ஆட்சியில் ஒரு நடத்துனர், டிரைவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆனால் இப்போது முதல்வர் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், நடத்துனர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், அப்துல் சமது, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

publive-image
புதுக்கோட்டை புறநகர் கிளை பேருந்தில் ரூ.9 இலட்சம் மதிப்புள்ள தனது பொருளை தவறுதலாக விட்டுச்சென்ற பயணியிடம் மீண்டும் பொருளை ஒப்படைத்த ஓட்டுநர் பா.கார்த்திக்கேயன், நடத்துனர் டி.சோசப்பால்ராஜ்  ஆகியோரை பாராட்டும் விதமாக அவர்களை அழைத்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது

புதுக்கோட்டை புறநகர் கிளை பேருந்தில் ரூ.9 இலட்சம் மதிப்புள்ள தனது பொருளை தவறுதலாக விட்டுச்சென்ற பயணியிடம் மீண்டும் பொருளை ஒப்படைத்த ஓட்டுநர் பா.கார்த்திக்கேயன், நடத்துனர் டி.சோசப்பால்ராஜ்  ஆகியோரை பாராட்டும் விதமாக அவர்களை அழைத்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Trichy Tnstc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment