IRCTC: இரட்டிப்பாக்கப்பட்ட மின்மயமாக்கல் பணி முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை - மதுரை பிரிவில் இயங்கும் ரயில்களின் பயண நேரம் 25 நிமிடங்கள் குறைய உள்ளது. ரயில்களின் வேக வரம்பை 100 முதல் 110 கி.மீ வேகத்தில் அதிகரிக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (சி.ஆர்.எஸ்) ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை இடையேயான இந்த 495 கி.மீ. வழித்தடத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் வழியாக ரயில்கள் இயங்கும்.
இருப்பினும், வேக வரம்பை அதிகரிப்பதற்கு முன் தெற்கு ரயில்வே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தலோடு அதிகாரி கே ஏ மனோகரன் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசம்!
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சி.ஆர்.எஸ்-ன் சமீபத்திய அதிகாரப்பூர்வ குறிப்பில், ரயில்வே அதன் திசைகளுக்கு இணங்க ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் தேதியை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, சென்னை - மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ், 495 கி.மீ நீளத்தை 6 மணி 30 நிமிடங்களில் இயக்கப்படுகிறது.
முதன்மை ரயில்களான பாண்டியன், நெல்லை மற்றும் பியர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் 7 மணி 50 நிமிடங்கள் முதல் 8 மணி 20 நிமிடங்கள் வரை பயணிக்கின்றன.
"சிஆர்எஸ் பரிந்துரைகள் முடிந்ததும், வேகம் 110 கிமீ வேகமாக அதிகரிக்கப்படும், இதன் மூலம் பயண நேரம் 25 நிமிடங்கள் குறைக்கப்படும். இப்போதைக்கு, வேகத்தை அதிகரிக்க காலக்கெடு இல்லை. சிஆர்எஸ் ஒப்புதல் அளித்த பிறகு, லாக் டவுனும் நிறைவுற்ற பிறகு, விரைவாக சேவைகளை மீண்டும் தொடங்கப்படும்" என்று ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, சென்னைக்கும் மதுரைக்கும் இடையிலான இரட்டிப்பாக்கப் பணி 2018 பிப்ரவரியில் நிறைவடைந்தது. திருச்சிக்கும் திண்டுக்கலுக்கும் இடையிலான தாமரைபாடி - கல்பாதி சத்திரமின் 25 கி.மீ பாதை இந்த பிரிவில் இரட்டிப்பாக்கப்பட்ட கடைசி பகுதியாகும்.
திருச்சி மற்றும் மதுரை இடையே சுமார் 14 தினசரி எக்ஸ்பிரஸ், 17 வாராந்திர மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன, மேலும் ரயில்வே கடந்த இரண்டு ஆண்டுகளில் வேகத்தை அதிகரிக்கும் வகையில் பாதையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிக்கும் மாவட்டங்கள் லிஸ்ட்: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3500-ஐ கடந்தது
ரயில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. தடங்களில் உள்ள தூசி மற்றும் மண்ணை நீக்குதல், பலகீனமாக உள்ள இணைப்புகளை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துள்ளன.
இருப்பினும், இந்த நடவடிக்கைக்கும், தனியார் ரயில்களின் இயக்கம் குறித்த புரபோசலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
"மிகவும் தேவைப்படும் பாதைகளில் ரயில் வேகத்தை 130 கி.மீ வேகத்தில் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டிருந்தது. ரயில்வே திட்டங்களின் ஒரு பகுதியாக பாதையை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்தன" என்று ரயில்வே அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.