தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு: பொய் எனக் கூறிய அன்புமணிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில்

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளிக்கவில்லை என கூறிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தி.மு.க அரசின் அறிவிப்புகள் அரை நாளிலேயே அம்பலமாகிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளிக்கவில்லை என கூறிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தி.மு.க அரசின் அறிவிப்புகள் அரை நாளிலேயே அம்பலமாகிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
trb raja anbumani

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடிக்கு முதலீடு செய்தது உறுதியான செய்தி என்று தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மின்னணுவியல் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் (Foxconn), தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் 14,000 உயர்மதிப்புள்ள பொறியியல் வேலைகள் உருவாக்கப்படும் என்றும் திங்கள்கிழமை (நேற்று) அறிவித்தது. அத்துடன், மாநிலத்தின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனமான வழிகாட்டி தமிழ்நாட்டில், நாட்டின் முதல் பிரத்யேக “ஃபாக்ஸ்கான் மேசையை” நிறுவ இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Advertisment

இந்த அறிவிப்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஃபாக்ஸ்கானின் இந்தியப் பிரதிநிதி மற்றும் மூத்த உலகளாவிய நிர்வாகி ராபர்ட் வூ ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்குப் பிறகு வெளியானது. இந்தச் சந்திப்பை அதிகாரிகள், நிறுவனத்தின் மாநிலப் பங்களிப்பில் ஒரு “புதிய மைல்கல்” என்று விவரித்துள்ளனர்.

இந்தக் குழுவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் விடுத்துள்ள அறிக்கையில், இது “தமிழ்நாட்டிற்கான மிகப்பெரிய பொறியியல் வேலைவாய்ப்பு உறுதிப்பாடு” என்று தெரிவித்தார்.

இது குறித்து டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “ஃபாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு செய்வதாகவும் 14,000 உயர்மதிப்புள்ள வேலைகளை உருவாக்குவதாகவும் உறுதியளிக்கிறது. பொறியாளர்களே, தயாராகுங்கள்! தமிழ்நாட்டின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனமான வழிகாட்டி தமிழ்நாட்டில்தான் இந்தியாவில் முதன்முறையாக ஒரு பிரத்யேக ஃபாக்ஸ்கான் மேசை அமைக்கப்படவுள்ளது” என்று திங்கள்கிழமை பதிவிட்டார்.

Advertisment
Advertisements

மேலும், “தமிழ்நாட்டின் மின்னணுவியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைக்கு இது மேலும் ஒரு முக்கிய உந்துதல்... ஃபாக்ஸ்கான் அதன் அடுத்த கட்ட மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தலைமையிலான மேம்பட்ட தொழில்நுட்பச் செயல்பாடுகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரும். நாங்கள் திராவிட மாடல் 2.0-க்கு அடித்தளம் அமைக்கிறோம்!” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய முதலீட்டை வரவேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழில்துறைத் துறையின் ஒற்றைச் சாளர வசதி அமைப்பு மற்றும் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் முழு ஆதரவை உறுதியளித்தார். “இந்த முயற்சி, தமிழ்நாடு ஒரு உற்பத்தி மையமாக இருந்து உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கான ஒரு மூலோபாயக் கண்டுபிடிப்பு மற்றும் பொறியியல் மையமாக மாறுவதைப் பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில்,  தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளிக்கவில்லை என கூறிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தி.மு.க அரசின் அறிவிப்புகள் அரை நாளிலேயே அம்பலமாகிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

“தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி புதிய முதலீடு செய்வதாகவும், அதன் மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஃபாக்ஸ்கான் நிறுவனம் அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இது தொழில் முதலீடுகள் விவகாரத்தில் தி.மு.க அரசு செய்யும் மோசடிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு” என அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், “திமுக அரசு உருவாக்கிய இந்த பொய்யான பிம்பங்கள் அரை மணி நேரத்தில் நொறுங்கிவிட்டன. ஃபாக்ஸ்கான் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,  “தமிழக முதலமைச்சர் அவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்து பேசியது உண்மை. ஆனால், இந்த சந்திப்பின் போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை; உறுதியளிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பார்கள். ஆனால், தி.மு.க அரசின் புளுகு அரை நாளிலேயே அம்பலமாகிவிட்டது” என்று அன்புமணி ராமதாஸ் கடுமையகாச் சாடினார்.

மேலும், “ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு மட்டுமல்ல, தொழில் முதலீடுகள் குறித்த தி.மு.க அரசின் அறிவிப்புகளில் 90% அறிவிப்புகள் பொய்யானவை. அதனால்தான், தி.மு.க ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, ஆனால், திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கிறது” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், கூகுள் நிறுவன உயரதிகாரிகளை சந்தித்துப் பேசியதாகவும், அதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள் தமிழ்நாட்டில் குவியப் போவதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்காத கூகுள் நிறுவனம் ரூ.1.20 லட்சம் கோடியில் செயற்கை அறிவுத்திறன் மையத்தை ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திமுகவின் நிலை இதுதான் என்று அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது. திமுக அரசின் இத்தகைய மோசடிகளை ஆதாரங்களுடன் கூடிய ஆவணமாக பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் வெளியிட்டு அம்பலப்படுத்தும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடிக்கு முதலீடு செய்தது உறுதியான செய்தி என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டி தீர்க்கிறார்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ““தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எப்போதெல்லாம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு நல்லது நடக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணத்தினால் அந்த வேலைவாய்ப்பில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டி தீர்க்கிறார். 

இன்றைய உலக அரசியல் சூழலில் ஒரு முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டுவருவது எவ்வளவு கடினம்!. அதிலுள்ள புவிசார் அரசியல் பிரச்சினைகள் (Geopolitical issues) என்னென்ன என்பதையெல்லாம் அறிந்துகொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிடுவதை இனி அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும். நேற்று பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, சரியான, எந்தவித தவறும் இல்லாத 100/100 உண்மையான செய்தி. இது ஏறத்தாழ ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு உறுதி ஆகியிருக்கும் வேலைவாய்ப்புகள். 

பல மாதங்களாக ஒரு சில ஊடகங்கள் அரசு எந்தவித புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU - Memorandum of Understanding) செய்தியையும் உறுதிசெய்யாத சூழலில் அவர்களாக யூகித்து எழுதிய செய்திகளை பழைய திட்டம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. ஒரு திட்டம் வேலை வாய்ப்புகளாக மாறும் என்று அரசுக்கு முழுமையான நம்பிக்கை வந்த பிறகே அதை துறையோ அல்லது நானோ உறுதிசெய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நடப்பு உலகளாவிய வர்த்தக சூழல் தெரியாமல் யார் எதற்காக எதை சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல், அல்லது புரிந்துகொள்ள முடியாமல், அல்லது புரிந்துகொண்டே நடிப்பவர்களுக்கு நாம் எதையும் சொல்ல முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: