உள்ளாடையை எம்.ஆர்.பி., விலையை விட கூடுதல் விலைக்கு விற்ற ட்ரெண்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எம்.ஆர்.பி. விலை 260க்கு விற்க வேண்டிய உள்ளாடையை ட்ரெண்ட்ஸ் நிறுவனம் ரூ.278க்கு விற்பனை செய்துள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்ட சிவபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்தத் உத்தரவு வெளியாகியுள்ளது.
அபராத பணத்தில் ரூ.2 லட்சம் தமிழக அரசுக்கும், ரூ.10 ஆயிரம் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கும் வழங்கப்பட உள்ளது. எம்.ஆர்.பி. விலை 260க்கு விற்க வேண்டிய உள்ளாடையை ட்ரெண்ட்ஸ் நிறுவனம் ரூ.278க்கு விற்பனை செய்த ட்ரெண்ட்ஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல் இரசீது தராத நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் நகைச்சுவையாக ஒரு புறாவுக்கு போரா? என வடிவேல் நகைச்சுவையை சுட்டிக்காட்டி கலாய்த்தும் வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil