Advertisment

வீலிங் செய்த 13 பேரின் லைசன்ஸ் ரத்து செய்ய பரிந்துரை : புகார் எண்கள் அறிவிப்பு

பைக் வீலிங் செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட 13 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்துச் செய்ய பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
Nov 14, 2023 17:21 IST
New Update
sai

பைக் வீலிங் செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட 13 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்துச் செய்ய பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக்கில் சாகசம் செய்த ஏளாமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருச்சியில் மட்டும் 13 பேர் இருச்சகர வாகனத்தை போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி காவல் ஆணையர் சார்பாக வெளியிட்ட அறிக்கையில், திருச்சி புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் தங்களது இருச்சக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , இதுவரை காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 6 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பைக் வீலிங் செய்து சிக்கிய 13 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு;

திருச்சி மாவட்ட புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 4 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து 9 நபர்கள் கைது செய்யப்பட்டு. அவர்கள் பயன்படுத்திய 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1. ஜீயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட, பர்ஷத் அலி (21), த.பெ. உஸ்மான் அலி, எலமனூர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து. மேற்படி நபரை கைது செய்தும், அவரது இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

2. காணக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தச்சங்குறிச்சி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த 1) அஜித் (21), த.பெ.முருகேசன், ஊட்டத்தூர் மற்றும் 2) அஜய் (20), த.பெ. புஷ்பநாதன், இந்திரா காலனி, சிறுகனூர் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மேற்படி நபர்களை கைது செய்தும், இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

3.சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சிறுமருதூர் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த 1) அஜய் (24). த.பெ. சீனிவாசன், கல்லாக்காடு. புத்தூர், திருச்சி, 2) மணிகண்டன், த.பெ. பழனிச்சாமி, சீனிவாசபுரம், தஞ்சாவூர். 3) சக்திவேல் (20), த.பெ. முத்துசெல்வம், கணபதி நகர், சிறுகனூர் மற்றும் 4) விஜய் (18), த.பெ. அண்ணாதுரை, தச்சங்குறிச்சி, இலால்குடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி 1-ஆம் எதிரியை திருச்சி மாநகர அரசு மருத்துவனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தும். 3 மற்றும் 4 ஆம் எதிரியை சமயபுரம் காவல் நிலையத்தில் கைது செய்தும், மேற்படி எதிரிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

4. இலால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்த 1) அருள்முருகன் (24), த.பெ. சௌந்தரராசன், குடித்தெரு, பனமங்லம், இலால்குடி. 2) கிரித்திஸ் (20), த.பெ.பாலகிருஷ்ணன், கம்பரசம்பேட்டை, ஸ்ரீரங்கம், 3) வசந்தகுமார் (20), த.பெ. தேவேந்திரன், கீழசிந்தாமணி, திருச்சி மற்றும் 4) பெருமாள் என்ற தேசிங்க பெருமாள் (18). த.பெ. பன்னீர்செல்வம், எசனை கோரை, இலால்குடி ஆகியோர்கள் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்தும், அவர்கள் பயன்படுத்திய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக Ihstagram. x (Twitter), Facebook & Youtube போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை கண்காணிக்க சமூக வலைத்தள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ததை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களை பகிர்பவர்களை சைபர் கிரைம் போலீஸார் மூலம் கண்காணிக்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்டவாறு இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்க அனுப்ப்பட்டுள்ளனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முன்னதாக youtube பிரபலம் டிடிஎப் வாசன் அதிவேகமாகச் சென்றதால் அவரது ஓட்டுநர் உரிமம் பத்தாண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகார் அளிக்க இலவச எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  9487464651 என்ற எஸ்பி அலுவலகத்தின் பிரத்யேக எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment