Advertisment

மின்வாரியத்தின் அலட்சியம்... பரிதாபமாக போன உயிர்

திருச்சியில் மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒயர் எதிர்பாராத விதமாக 14 வயதான சிறுவன் மீது பட்ட நிலையில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல்கருகி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy 14 year old boy electrocuted while playing Tamil News

சிறுவனின் இறப்புக்கு காரணமான மின்சார ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், சிறுவனின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி, பட்டர்வொர்த் ரோடு, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராஜேஷ் - சிவரஞ்சனி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு பிரித்வி அஜய் என்ற மகன் இருந்தார். பிரித்தி அஜய் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். 

Advertisment

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் தனது வீட்டருகே நண்பர்களுடன் ஒடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒயர் எதிர்பாராத விதமாக சிறுவன் மீது படவே சம்பவ இடத்திலேயே உடல்கருகி இறந்து விட்டார்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு தினங்களாக அப்பகுதியில் மின் கம்பங்களில் மின்சாரவாரிய ஊழியர்கள் மின்விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது மின் வயர்களை தொங்கும் நிலையில் அபாயகரமாக நிலையில் விட்டு சென்றதால் சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தாக சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுவனின் இறப்புக்கு காரணமான மின்சார ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், சிறுவனின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment