Advertisment

பைக் திருட்டில் 5 பேர் கைது: போராட்டத்தில் குதித்த உறவினர்கள் தற்கொலை முயற்சி

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய வளாகத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்த உறவினர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy: 5 Bike Thief relatives protest at police station Tamil News

திருச்சி: பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் செய்த உறவினர்கள்.

க.சண்முகவடிவேல்

Advertisment

திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட அம்மாக்குளம் பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும்போது தற்கொலை மிரட்டல் விடுத்து திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த விபரம் வருமாறு:-

திருச்சி அரியமங்கலம் காவல்சரகத்திற்குட்பட்ட அம்மாக்குளம் கலைவாணர் தெருவை சேர்ந்த பிச்சைமுத்து-விசாலாட்சி தம்பதியினர். இவர்கள், தங்களது மகன் பரத்குமார் என்பவருக்கு கடந்த 1-ம் தேதி ரூ 2 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புடைய இரு சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்ற பரத்குமார் இரவு வீட்டில் நிறுத்திவிட்டு உறங்கச்சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது புதிய பைக்கை காணாது அதிர்ச்சியடைந்தார்.

பரத்குமார் பல இடங்களிலும் பைக்கை தேடியும், பைக்கின் புகைப்படத்துடன் எனது புதிய பைக் காணவில்லை என்றும், இது பற்றி யாராவது தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர்களுக்கு தகுந்த சன்மாணமும் வழங்கப்படும் எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். அப்போதும் பைக் குறித்து எந்தவித தகவலும் அறியப்படாததால், பரத்குமாரின் தாய் விசாலாட்சி இச்சம்பவம் குறித்து நேற்று முன்தினம் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றிய அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் ராஜ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் வலுக்க தொடர் விசாரணையை அவனிடம் மேற்கொண்டனர். அப்போது அவன் திருச்சி பாலக்கரை கூனி பஜாரை சேர்ந்த மேகராஜ், அரியமங்கலம் நேருஜிநகரைச் சேர்ந்த ஹரிபிரசாத் ஆகியோர் தான் பரத்குமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் லாக்கை உடைத்து பைக்கை எடுத்து வந்ததாகவும், அதை ஸ்டார்ட் செய்ய முடியாததால் அந்த புதிய பைக்கை அருகில் மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் அந்த பைக்கை அவனிடம் இருந்து பறிமுதல் செய்ததோடு இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரையும் தேடிப்பிடித்து திருட்டு வழக்கில் கைது செய்தனர்.

இந்த நிலையில் மேக ராஜ் மனைவி எலிசபெத் என்பவர் தனது கணவர் மீது அரியமங்கலம் போலீசார் பொய் குற்றம் சுமத்துவதாக கூறி நீதிமன்றத்திற்கு காவல் நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல முடியாமல் அவரது உறவினரான அந்தோணி மகன் லாரன்ஸ், திருச்சி பெரிய மிளகுபாறையை சேர்ந்த சின்னப்பதாஸ், காமராஜ் மகன் மைக்கேல், பெரிய மிளகுபாறை அந்தோணி மகன் ஆதாம், திருச்சி பாலக்கரை கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் அறிவழகன் ஆகிய 5 பேரும் போலீஸாரை பணி செய்ய விடாமல் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக்கூறி செல்போன் டெம்பர் கிளாஸ்ஸை எடுத்து கைகளில் கிழித்துக்கொண்டதால் அரியமங்கலம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீஸார் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாமல் அடாவடி செய்ததைத் தொடர்ந்து மேற்கண்ட ஐந்து பேரையும் அரியமங்கலம் போலீசார் அதிரடியாக கைது செய்ததோடு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அரியமங்கலம் காவல் நிலைய வளாகத்திலேயே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக உறவினர்கள் போராட்டம், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment