scorecardresearch

புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் படுகொலை வழக்கு: 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரி வில்லியனுாரில் வெடிகுண்டு வீசி பா.ஜ.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Trichy: 7 surrendered in court, Puducherry BJP functionary death case Tamil News
Puducherry BJP functionary death case; 7 surrendered in Trichy court Tamil News

க. சண்முகவடிவேல்

புதுச்சேரி புதுமங்கலம் தொகுதி பா.ஜ.க மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக செந்தில்குமரன் இருந்தவர். பா.ஜ.க பிரமுகரான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் தனது வீட்டுக்கு அருகே பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது நேற்று இரவு 7 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசி, கத்தியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். புதுச்சேரியில் இரவு நேரத்தில் அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கொலையில் தொடர்புடைய புதுச்சேரி திருக்காஞ்சி நித்தியானந்தம் (43), புதுச்சேரி கொம்பாக்கம் சிவசங்கர் (23), புதுச்சேரி கோர்கார்ட் ராஜா (23), புதுச்சேரி தனத்து மேடு வெங்கடேஷ் (25), கடலூர் கிளிஞ்சி குப்பம் பிரதாப் (24), புதுச்சேரி கோர்கார்டு கார்த்திகேயன் (23), புதுச்சேரி அரியாங்குப்பம் விக்னேஷ் (26) ஆகிய 7 பேரும் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 3 நீதிபதி பாலாஜி முன்பு சரணடைந்தனர். இவர்களை விசாரித்த நீதிபதி ஏழு பேரையும் இம்மாதம் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மேற்கண்ட ஏழு பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy 7 surrendered in court puducherry bjp functionary death case tamil news