க. சண்முகவடிவேல்
புதுச்சேரி புதுமங்கலம் தொகுதி பா.ஜ.க மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக செந்தில்குமரன் இருந்தவர். பா.ஜ.க பிரமுகரான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் தனது வீட்டுக்கு அருகே பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது நேற்று இரவு 7 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசி, கத்தியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். புதுச்சேரியில் இரவு நேரத்தில் அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கொலையில் தொடர்புடைய புதுச்சேரி திருக்காஞ்சி நித்தியானந்தம் (43), புதுச்சேரி கொம்பாக்கம் சிவசங்கர் (23), புதுச்சேரி கோர்கார்ட் ராஜா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil