Advertisment

திருச்சியில் இன்று அ.தி.மு.க பிரம்மாண்ட பொதுக் கூட்டம்: ஒரே மேடையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் இ.பி.எஸ்

திருச்சியில் இன்று 40 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

author-image
WebDesk
New Update
Admk camp.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழக நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இன்று காலை தனது தேர்தல் பிரச்சாரத்தை சேலத்தில் துவங்கிய எடப்பாடி பழனிச்சாமி, இன்று திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று  40 தொகுதிக்குமான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரத்தை துவக்குகிறார் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி.

Advertisment

இது குறித்து அ.தி.மு.க வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, “ஏப்ரல் 19-ம் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அதிமுகவின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி மு.பழனிசாமி மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, இன்று மார்ச் 24-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோவில் பகுதியில் தனது பரப்புரையை ஆரம்பிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மார்ச் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல், எம்ஜிஆர் திடலிலும், இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள வாகையாடிமுனையிலும் பரப்புரை செய்கிறார். மார்ச் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் திடலிலும், இரவு 7 மணிக்குத் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோயில் அருகிலும் பரப்புரை மேற்கொள்கிறார். மார்ச் 28-ம் தேதி மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாவடி தோப்பு திடலிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பரப்புரை செய்கிறார்.

மார்ச் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஹைவே இன் அருகிலும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரத்தில் உள்ள ராஜேந்திரபிரசாத் சாலையில் உள்ள அன்னை தெரசா பள்ளி அருகிலும் பரப்புரை செய்கிறார். மார்ச் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரில் உள்ள ரோடியர் மைதானத்திலும், மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும் பரப்புரை செய்கிறார். 

மார்ச் 31-ம் தேதி மாலை 3.30 மணிக்கு சிதம்பரம் புறவழிச்சாலையிலும், மாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவிலும், இரவு 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூர் தெற்கு வீதியிலும் பரப்புரை மேற்கொள்கிறார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, கூட்டணி கட்சியினரின் வேட்பாளர்கள், விளவங்கோடு தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் ஆகியோரை இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்துகிறார்.

வடசென்னை – ராயபுரம் மனோ

தென்சென்னை – ஜெயவர்த்தன்

காஞ்சிபுரம் – ராஜசேகர்

அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்

கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்

ஆரணி – கஜேந்திரன்

விழுப்புரம் – பாக்யராஜ்

சேலம் – விக்னேஷ்

நாமக்கல் – தமிழ்மணி

ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்

கரூர் – கே.ஆர்.எல்.தங்கவேல்

சிதம்பரம் – சந்திரஹாசன்

நாகை – சுர்ஜித் சங்கர்

மதுரை – சரவணன்

தேனி – நாராயணசாமி

ராமநாதபுரம் – ஜெயபெருமாள்

கோவை – சிங்கை ராமச்சந்திரன்

பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி

திருச்சி – கருப்பையா

பெரம்பலூர் – சந்திரமோகன்

மயிலாடுதுறை – பாபு

ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்

தருமபுரி – அசோகன்

திருப்பூர் – அருணாசலம்

நீலகிரி – லோகேஷ்

வேலூர் – பசுபதி

திருவண்ணாமலை – கலியபெருமாள் 

கள்ளக்குறிச்சி – குமரகுரு

சிவகங்கை – சேவியர் தாஸ்

நெல்லை – ஜான்சி ராணி

புதுச்சேரி – தமிழ்வேந்தன்

தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி

கன்னியாகுமரி – பசிலியா நசரேத்.

இன்று நடைபெறும் அதிமுக பொதுக்கூட்ட பணிகளை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார், மாநகரச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பரஞ்சோதி மனோகரன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் பொதுக் கூட்டம் நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment