/indian-express-tamil/media/media_files/y4z8eg4xYjl1xiAM2OS4.jpeg)
திருச்சி அருகே எம்.ஜி.ஆர் சிலை சேதம்: சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி அ.தி.மு.க. நிர்வாகிகள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்டது ரெட்டி மாங்குடி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு அ.தி.மு.க நிர்வாகிகளால் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது.
இந்தநிலையில், நேற்று நள்ளிரவில் சமுக விரோதிகள் எம்.ஜி.ஆர் சிலையின் இடது கையை உடைத்து இடுப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தி உள்ளனர். இதனை இன்று (அக்டோபர் 22) காலையில் பார்த்த அ.தி.மு.க பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ரெட்டிமாங்குடி கிளை செயலாளர் அம்மாசி மற்றும் கட்சி நிர்வாகிகள் மூலம் புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் சிறுகனூர் காவல்துறைக்கும், லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்: அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்#Trichy#ADMKpic.twitter.com/iUuSfIlB6f
— Indian Express Tamil (@IeTamil) October 22, 2023
பிறகு எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்று ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டமும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, புள்ளம்பாடி வடக்கு தெற்கு ஒன்றிய துறை செயலாளர்கள் கோவிந்தசாமி, பாண்டியன், துணை செயலாளர் பிச்சமணி, ரெட்டி மாங்குடி கவுன்சிலர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி மருதமுத்து மற்றும் ரெட்டிமாங்குடி கிளை செயலாளர்கள் சீனி, பெண்கள் உள்பட ஏராளமானோர் சாலை மறியல் செய்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.