/indian-express-tamil/media/media_files/91pgX8Rhs71Rqt55mAZo.jpeg)
ஜெயலலிதா பிறந்த நாள்; அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி கொண்டாடிய திருச்சி முன்னாள் எம்.பி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த தினத்தை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் வெகு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், பெல் தொழிற்சங்க வாயிலில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கும், அதன் அருகே அமைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருஉருவப்படத்திற்கும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான ப.குமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. இதேபோல் திருச்சி அரியமங்கலம், பொன்மலை மாஜி ராணுவ காலனி பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், தொழிலாளர்கள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக, திருச்சி லால்குடி அரசு மருத்துவமனயில் இன்று பிறந்த 5 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார் திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் முன்னாள் எம்பியுமான ப.குமார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.