Advertisment

நூதன முறையில் ரூ. 1.61 கோடி மோசடி; பணத்தை இழந்த தம்பதி

திருச்சி மாவட்டத்தில், ஓய்வு பெற்ற தம்பதியிடமிருந்து ரூ. 1.61 கோடி நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
cyber crime

திருச்சி மாவட்டத்தில், வயதான தம்பதியிடமிருந்து ரூ. 1.61 மோசடி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சி, ஸ்ரீரங்கம் நெல்சன் சாலை சாரதி நகரைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தேவகியும் அதே நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். 

தேவகியின் கைப்பேசிக்கு கடந்த மாதம் 16-ஆம் தேதி வந்த அழைப்பில், தனியாா் கூரியா் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி பேசிய மா்ம நபா் ஒருவா், "சீனாவுக்கு அனுப்புவதற்காக ஒரு பாா்சல் வந்துள்ளது. அதில் உங்களது ஆதாா் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆதாா் எண்ணில் பெரிய அளவில் பணமோசடி நடந்துள்ளது. 

இதற்கு பெரிய தொகை அபராதம் செலுத்த வேண்டி வரும். அதனை நாங்கள் உச்சநீதிமன்றத்தில் உங்களுக்காக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுத் தருகிறோம்" எனக் கூறியுள்ளாா். இதனை நம்பி தேவகி தனது வங்கிக் கணக்கு விவரங்களை போனில் பேசிய நபருக்கு அனுப்பியுள்ளாா்.

Advertisment
Advertisement

இதைப் பாா்த்த மா்ம நபா், "உங்களைக் கைது செய்யாமல் இருக்க உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். அதன்பேரில் தேவகி, தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1.61 கோடி பணத்தை அந்த மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக அனுப்பியுள்ளாா். இதன்பின்னர், அந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அந்நபர் எடுக்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தேவகி, போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சைபர் கிரைம் போலீஸார் கூறுகையில், ''அரசு அலுவலராக இருந்த ஒருவருக்கு சைபர் குற்றங்கள் குறித்து அறியாதது எங்களுக்கே ஆச்சர்யமாக உள்ளது. இதுபோன்ற தவறான அழைப்புகள் வந்தால் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளனர்.

செய்தி - க.சண்முகவடிவேல்

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Cyber Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment