மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம் இருந்து 2,291 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம் இருந்து ஏராளமான 22 மற்றும் 24 கேரட் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1 கோடியே 53 லட்சம் ஆகும்.
/indian-express-tamil/media/media_files/SYz96lzNPa2HkhClA3UD.jpeg)
இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், எந்தவித ஆவணமும் இன்றி சுங்க வரி செலுத்தாமலும் தங்கத்தை கடத்தியது தெரிய வந்தது.
அவரது பாஸ்போர்ட்டை சரிபார்த்ததில் அவர் தங்கத்தை இறக்குமதி செய்ய தகுதியான பயணி இல்லை என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த பெண் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“