scorecardresearch

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: ரூ.39 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய்.39.30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: ரூ.39 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய்.39.30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு;

திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அபூபக்கர் 38 என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வெளிநாட்டிற்கு கடத்த இருந்த 39.30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து தொடர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy airport 39 lakhs american dollar seized

Best of Express