திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து ஊக்க மாத்திரைகள் பறிமுதல் செய்து பயணிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஊக்க மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சனிக்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் வழக்கமான முறையில் சோதனை செய்தனர்.
இதில் பயணிகள் 3 பேர் உரிய அனுமதியின்றி வெளிநாட்டு தயாரிப்பு ஊக்க மாத்திரைகள் 407 பாக்கெட்டுகள் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பயணிகள் 3 பேரிடம் விசாரணை மேற்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவை ஸ்விட்சா்லாந்தில் தயாரிக்கப்பட்ட விலை உயா்ந்த ஊக்க மாத்திரைகள் என கூறினர். மேலும் மாத்திரைகளை பறிமுதல் செய்து 3 பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு ஒரு கோடியே 37 லட்சம் என தெரிவித்தனா்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“