திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும், சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் ஏராளமான விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் உள்ளிட்டவைகளை கடத்துவது வாடிக்கையாக இருக்கிறது. அந்தவகையில், இன்று (ஜுன் 6) அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி எடுத்துவரப்பட்ட ரூ.20 லட்சத்து 37 ஆயிரத்து 126 மதிப்புள்ள 338 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஆண் பயணியை சோதனை செய்தனர். இதில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து வைத்து ரூ. 20 லட்சத்து 37 ஆயிரத்து 126 மதிப்புள்ள 338 கிராம் எடையுள்ள தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“