/tamil-ie/media/media_files/uploads/2020/01/images-6.jpg)
`Trichy Anna University student Logeshwari committed suicide
Trichy Anna University student Logeshwari committed suicide : திருச்சி - புதுக்கோட்ட்டை சாலையில் உள்ள மாத்தூர் என்ற பகுதியில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதில் தர்மபுரியை சேர்ந்த லோகேஸ்வரி என்ற மாணவி சிவில் என்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். அவர் நவல்பட்டு பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி தினமும் பல்கலைக்கழகம் வந்து சென்றார்.
அதே பல்கலைக்கழகத்தில் தர்ம்புரியை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வந்தார். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகி பின்னாளில் காதலிக்க துவங்கினர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கவும் நிச்சயதார்த்தமும் சமீபத்தில் நடந்து முடிந்தது. படிப்பு முடிவுற்றவுடன் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டிருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Logeshwari.gif)
ஆனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் லோகேஸ்வரி. அப்பாவிற்கு அதிகமாக இருக்கும் கடன் தொல்லையால், படிப்பினை தொடருவதில் சிக்கல்கள் இருந்துள்ளது. கல்வி உதவித்தொகைக்காக அவர் முயற்சி செய்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. குடும்ப சூழல் காரணமாக மன உளைச்சலில் இருந்த லோகேஸ்வரி வியாழக்கிழமை இரவு (09/01/2020) அன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது அவருடன் படிக்கும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் அவருடைய பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். தற்கொலைக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர் காவல்துறையினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.