விநாயகர் சதுர்த்தி: 238 போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு; அரியமங்கலத்தில் பரபரப்பு

நாளை செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அரியமங்கலம் பகுதியில் நடந்த போலீசாரின் திடீர் கொடி அணிவகுப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளை செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அரியமங்கலம் பகுதியில் நடந்த போலீசாரின் திடீர் கொடி அணிவகுப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Trichy Ariyamangalam Vinayagar Chaturthi Flag parade attended by 238 policemen Tamil News

நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-27) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அரியமங்கலம் பகுதியில் நடந்த போலீசாரின் கொடி அணிவகுப்பை மாவட்ட இணை கமிஷனர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-27) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருப்பதற்காகவும், மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் போலீசார் ஆங்காங்கே கொடி அணி வகுப்புகள் நடத்துவது வழக்கம். அதன்படி, திருச்சி அரியமங்கலம் பகுதியில் இன்று போலீசார்  நடந்திய கொடி அணி வகுப்பை திருச்சியில் மாநகர இணை ஆணையர் ஈஸ்வரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

Advertisment

இந்த அணி வகுப்பில் தானும் சக போலீசார் உடன் கலந்து கொண்டு அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 22 ராஜ வீதிகள் மற்றும் ரயில் நகர் வழியாக காட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் வரை நடந்து சென்றார். இந்த கொடி அணிவிப்புகளில் மாவட்ட இணை கமிஷ்னர் சிவின்,  4 ஏசி, 9 இன்ஸ்பெக்டர், எஸ் ஐ 12 பேர், போலீசார் மற்றும் போலீசார் 100 பேர், டிஎஸ்பி பட்டாலியன் 40 பேர், போக்குவரத்து காவலர்கள் ஆறு பேர் பேண்டு வாத்திய போலீசார் எட்டு பேர் மற்றும் மாநகர ஆயுதப்படை போலீசார் 50 பேர் என சுமார் 238 போலீசார் இந்த அணி வகுப்பில்  கலந்து கொண்டனர். இந்த திடீர் அணி வகுப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: