/indian-express-tamil/media/media_files/PipMlB0pukB2CuzQIrhe.jpg)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்த வழக்கின், விசாரணை முடிவுற்று இன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார்.
க.சண்முகவடிவேல்
Trichy: திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (வயது.79), இவர் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். 1989-1993 காலக் கட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்தபோது, அவரது வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி (வயது65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532/- (ரூபாய் முப்பத்தி இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐநூற்றி முப்பத்தி இரண்டு மட்டும்) 98% ஆகும்.
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன்பேரில், கடந்த 17.08.2001 அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவில் காவல் ஆய்வாளர் அம்பிகாபதி என்பவர் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்த வழக்கின் தொடர் விசாரணையை தற்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், சிறப்பு அரசு வழக்குறைஞர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சேவியர்ராணி மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர்களால் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்த வழக்கின், விசாரணை முடிவுற்று இன்று (25.04.2024) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிடப்பட்டது
சார்பதிவாளர் ஜானகிராமன், அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கும் மேலாகும் என தெரிய வருகிறது.
சார்பதிவாளர் மீது கொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் திறமையாக சாட்சியங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த டி.எஸ்.பி மணிகண்டன் மற்றும் திறமையாக வாதாடி குற்றவாளிகளை சிறைக்குத் தள்ளிய அரசு வழக்கறிஞரையும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.