/indian-express-tamil/media/media_files/2025/10/22/trichy-bharat-heavy-electricals-limited-bhel-campus-school-headmaster-removed-tamil-news-2025-10-22-18-18-35.jpg)
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு பணியாற்றும் பெண் கணினி உதவியாளரிடம் திருமண உறவுக்கு மீறிய தகாத பழக்கத்திலிருந்த தலைமை ஆசிரியரை கட்டாய விருப்ப ஓய்வுக்கு செல்ல பள்ளி நிர்வாகம் அறிவுறுத்திய சம்பவம் திருச்சி மாவட்ட கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் செயல்பட்டு வரும் ஒரு அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 55 வயது கொண்ட ஒருவர் பெல் குடியிருப்பில் தங்கி 21 வருடம் பள்ளி ஆசிரியராகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகவும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பெல் குடியிருப்பை சேர்ந்த பெல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரியின் 34 வயது கொண்ட மனைவி அதே பள்ளியில் ஒப்பந்த கணினி உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். ஒரே பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியருக்கும், அந்தப் பெண் ஆசிரியருக்கும் இடையே திருமண உறவுக்கு மீறிய தகாத பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் எல்லை மீறி சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சக பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியரின் கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சென்ற தலைமை ஆசிரியர் அந்த பெண் ஆசிரியருடன் உல்லாசமாக இருந்திருக்கின்றார்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக அந்த பெண் ஆசிரியரின் கணவர் திடீரென வீட்டிற்கு வந்தபோது, தனது மனைவியுடன், பள்ளி தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்ததோடு அக்கம் பக்கத்தாரை அழைத்து விபரத்தை தெரிவித்தார். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சக பெல் ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசு உதவி பெரும் பள்ளியின் தலைமை ஆசிரியரையும், பெண் ஆசிரியரையும் கண்டித்து, தலைமை ஆசிரியரை விரட்டியடித்திருக்கின்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் தான் பணியாற்றும் பெல் நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கின்றார். அந்தப்புகாரின் அடிப்படையில் பெல் நிர்வாகம் பள்ளி நிர்வாகத்திடம் பேசி தமது வளாகத்தில் இயங்கக்கூடிய ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு நன்நடத்தை போதிக்கவேண்டியவரே ஆசிரியையிடம் தகாத உறவு வைத்திருந்தது அதிர்ச்சியாக இருப்பதாகவும், உடனடியாக அந்த தலைமை ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கடிந்துக்கொண்டதோடு, பெல் வளாக குடியிருப்பிலிருந்தும் அவரை காலி செய்ய வலியுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் உடனடியாக அந்த தலைமை ஆசிரியரை பள்ளிக்குள் அனுமதிக்காமல் அனுப்பியதோடு மருத்துவர் விடுப்பில் செல்ல அறிவுறுத்தியதோடு, கட்டாய விருப்ப ஓய்வில் செல்வதாக அவரிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டு, பணி நீக்கம் செய்தது. இந்தச் சம்பவம் பெல் மற்றும் திருச்சி மாவட்ட கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து இருவரும் கட்டாய விருப்ப ஓய்வில் அனுப்பப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.