சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடி போராட்டம்: பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் சங்கம் முடிவு; போலீஸ் குவிப்பு

சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுவதாக பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ள நிலையில், அங்கு போலீசார் குவிப்பட்டு வருகிறார்கள்.

சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுவதாக பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ள நிலையில், அங்கு போலீசார் குவிப்பட்டு வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Trichy Bharat Heavy Electricals Limited BHEL contract workers union Black flag protest on Independence Day police deployed Tamil News

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன நுழைவாயில் முன்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இன்று வாயிற்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு எல்.சி.எஸ் என்கிற ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உற்பத்தி போனஸ் வழங்க கோரி பெல் நிறுவன நுழைவாயில் முன்பு வாயிற் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எல்.சி.எஸ் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.

Advertisment

சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத்தின் மாநில தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் சொசைட்டி தொழிலாளர்களுக்கு உற்பத்தி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. நாளை பெல் வளாகப் பகுதியில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக சங்கத்தினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் திக, எம்.எல்.எப் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம், ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதனிடையே, சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுவதாக பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ள நிலையில், அங்கு போலீசார் குவிப்பட்டு வருகிறார்கள். 

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: