அதிரடி காட்டிய கமாண்டோ படை: அதிர்ச்சியில் பெல் ஊழியர்கள்

கமாண்டோ படையினரின் திடீர் ஒத்திகையாலும், இது குறித்த தகவல் தெரியாததாலும் இரவுப் பணியில் இருந்த பெல் தொழிலாளர்கள் அச்சத்திலும் குழப்பத்திலும் அதிர்ச்சி அடைந்தனர்

Trichy bhel
திருச்சி பெல் நிறுவனத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட கமாண்டோ படையினர்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை  நிறுவனமாகும். இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் பெல் நிறுவனத்தில் நுழைந்தால் எப்படி நிறுவனத்தை பாதுகாப்பது? தொழிலாளர்களை மீட்பது? என்பது குறித்து நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை பெல் நிறுவன வளாகத்தில் உள்ள நிர்வாக கட்டிடம் எண் 24 மற்றும் கட்டிடம் எண் 214 பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படை மேஜர் துணை கமாண்டர் திவாகர் தலைமையில் 120 படைவீரர்களும், தமிழ்நாடு கமாண்டோ படையைச் சேர்ந்த துணை கமாண்டர் பொன் ராஜ்குமார் தலைமையில் 40 வீரர்களும் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள்: கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்த கார்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ஒத்திகையின் போது திருவெறும்பூர் டி.எஸ்.பி அறிவழகன், பெல் நிறுவன காவல் நிலைய ஆய்வாளர் கமலவேணி ஆகியோர் உடன் இருந்தனர். கமாண்டோ படையினரின் திடீர் ஒத்திகையால் இரவு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு இந்த ஒத்திகை குறித்த தகவல் தெரியாததால் தொழிலாளர்கள் அச்சத்திலும் குழப்பத்திலும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதேபோல்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்திலும் நள்ளிரவு கமாண்டோ அதிரடிப் படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். பூட்ஸ் காலுடன் அதிரடியாக கோயில் பகுதியில் உள்ளே நுழைந்த கமாண்டோ படை ஒத்திகையால் அந்த பகுதியில் இருந்த பட்டர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். ஆகம விதிப்படி கோயில் நள்ளிரவில் திறக்கப்பட வேண்டிய அவசியம் இல்லாத நிலையில் ஒத்திகை என்ற பெயரில் கோயிலுக்குள் நுழைந்தது வேதனை அளிக்கின்றது என்று பட்டர்கள் கூறினர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy bhel employees fear of sudden commando operation practice

Exit mobile version