Advertisment

மே.23-ம் தேதிக்குள் முத்தரையர் மணிமண்டபத்தை திறக்க வேண்டும் : திருச்சி ஆட்சியரிடம் பா.ஜ.க கோரிக்கை

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy

திருச்சிராப்பள்ளி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு காலத்திற்கு மேலாகியும் தற்பொழுது வரை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே  மே 23ஆம் தேதிக்குள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு முன்பே மணிமண்டபத்தை திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவை சேர்ந்த திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளனர்.

Advertisment

திருச்சியில் வருடம் தோறும் பேரரசர் பெரும்பிடுகு முத்தையர் பிறந்தநாள் விழா மே 23ஆம் தேதி சதய விழாவாகவும், அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் விழா 1348 வது சதய விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

publive-image

இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் இதுவரை அந்த மணிமண்டபம் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் மனு அளித்துள்ளனர். அதில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னரே பெரும்பிடுது முத்தரையர் சதய விழாவிற்கு திறக்க வேண்டிய மணிமண்டபம் தற்போது வரை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது வேதனையளிக்கின்றது.

வருகிற மே 23ஆம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக அவரது மணிமண்டபத்தை திறக்க வேண்டும் ஏனெனில், திருச்சியில் பெரும்பாலும் அந்த சமூகத்தைச்சேர்ந்தவர்கள் பெரும்பான்மையுடன் உள்ளதால் சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த விழாவிற்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் ஆர்.வி.பரதன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் செல்வகுமார் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் வருகை தருவது வழக்கம் அதனால் தான் மே 23-ந் தேதிக்குள் மணிமண்டபத்தை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

publive-image

ஆட்சியருடனான சந்திப்பின்போது, திருச்சி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட பொதுசெயலாளர்கள் காளீஸ்வரன், ஒண்டி முத்து பொன். தண்டபாணி. மாவட்ட நிர்வாகிகள் சந்துரு, மணிமொழி சர்வேஸ்வரன், ஜெயந்தி நாகேந்திரன், வேளாங்கண்ணி, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி.இந்திரன், பாலக்கரை மண்டல் தலைவர் மல்லி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய தமிழக நிலப்பரப்பை கி.பி.705 முதல் கி.பி.745 வரை ஆட்சி செய்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். தமது நீண்டகால அரச வாழ்வில், 16 போர்களை சந்தித்து, அவை அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். இதனால் அவர் நிகரில்லா மாவீரனாக திகழ்ந்தார்.தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, அவை காலத்திற்கும் நிலைப் பெறச் செய்தவர்.

இத்தகைய சிறப்புமிக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளான சதயவிழா, ஆண்டுதோறும் மே 23-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், திருச்சி மாநகரின் மையப் பகுதியான ஒத்தக்கடையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையரின் திருஉருவச் சிலைக்கு, அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

publive-image

இதற்கிடையே, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் வ.உ.சி., சாலையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் நூலகத்துடன் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், ரூ.99 லட்சம் செலவில், அவரது முழு உருவச் சிலையுடன், 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌. மேலும், 1,184 சதுர அடி பரப்பளவில் மண்டபத்தின் தரைத் தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர்த்து, நீதிக்கட்சியின் வைரத்தூணாக விளங்கிய  சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மணிமண்டபம், ரூ.43 லட்சம் மதிப்பீட்டில், 1,722 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், ரூ.42 லட்சம் செலவில், 1,722 சதுர அடி பரப்பளவிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த, 3 மணி மண்டபங்களின் பணிகள் நிறைவுற்று ஓராண்டுகளுக்கு மேலாகியும், தற்போது வரை திறப்பு விழா காணாதது பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment