மணல் லாரியால் ஏற்பட்ட விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செல்லூர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியில் ஒரு பேருந்துக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது பின்னால் அவ்வழியாக வந்த மணல் லாரி ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கார் மீது மோதியதில் பேருந்துக்கும் லாரிக்கும் இடையில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கி காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பலியாகினர்

author-image
WebDesk
New Update
மணல் லாரியால் ஏற்பட்ட விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செல்லூர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியில் ஒரு பேருந்துக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது பின்னால்  அவ்வழியாக வந்த மணல் லாரி ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கார் மீது மோதியதில் பேருந்துக்கும் லாரிக்கும் இடையில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கி காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பலியாகினர். இது குறித்த விபரம் வருமாறு;

Advertisment

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய செல்லூர் என்ற இடத்தில்  அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே காரில் பயணித்த 2 பெண்கள், 2 சிறார்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

publive-image

கார் விபத்தில் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விஜயராகவன் மற்றும் அவரது மனைவி வத்சலா, அவருடைய தாயார் வசந்த லட்சுமி, மகன்கள் விஷ்ணு, அதீர்த் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.

Advertisment
Advertisements
publive-image

மேலும் இவர்களின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் விளாங்குடி. கணவன் மனைவி இருவரும் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். கேரளா கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூர் செல்லும்போது விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: