/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-24T115712.640.jpg)
Trichy-Chennai National Highway Accident; 4 got minor injuries Tamil News
க.சண்முகவடிவேல்
சென்னையை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் சியாம் சுந்தர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து தனது நண்பர்களுடன் மீண்டும் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே கார் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த சிக்னல் கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த நண்பர்கள் மூன்று பேரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-24T115712.640-1.jpg)
இந்த விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் காரை அப்புறப்படுத்தினர். பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.