/tamil-ie/media/media_files/uploads/2023/05/dead-17.jpg)
Trichy Chennai Highways car fell into valley 3 dead
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று இன்று (ஆகஸ்ட் 16) காலை சென்று கொண்டிருந்தது. அய்யனார் கோவில் என்ற இடத்தின் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எங்கு செல்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.