க.சண்முகவடிவேல்
Trichy: திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 19 மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தீர்வு காண பரிந்துரைக்கப்பட்டது. மேலும், 13 பழைய மனுக்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்து தீர்வு காணப்பட்டது.
மேலும், காவல் ஆணையர் தெரிவிக்கையில்; தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட "மக்களுடன் முதல்வர்" முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 478 மனுக்கள் பெறப்பட்டு, 344 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதம் உள்ள 134 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த 427 மனுக்களில் 158 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டும், மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என முகாமில் காவல் ஆணையர் தெரிவித்தார்.
இந்த முகாமில், காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு, காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“