Advertisment

திருச்சியில் ரவுடிகளுக்கு இடையே மோதல்: நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy: Clash between local rowdies; Country-made bombs seized Tamil News

திருச்சியில் அதிக க்ரைம் ரேட் நிறைந்த காவல் நிலையங்களின் பட்டியலில் அரியமங்கலம், பொன்மலை காவல் நிலையங்கள் முன்னிலையில் உள்ளனர்.

க.சண்முகவடிவேல்

Advertisment

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான முட்புதர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஆலோசனையின்படி, பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அரியமங்கலம், பொன்மலை காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட திடீர்நகர், பொன்மலை நார்த்டி குடியிருப்பு எல்லைக்கு விரைந்தனர்.

publive-image

நார்த்டி, திடீர்நகர் எல்லையில் உள்ள ஆள் அரவமற்ற முட்புதர் பகுதியில் ஒரு அட்டைப்பெட்டியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினர். பின்னர், அந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பு கருதி மணச்சநல்லூர் எதுமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் வெடிமருந்து குடோனுக்கு அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என போலீசார் தெரிவித்தனர்.

திருச்சியில் அதிக க்ரைம் ரேட் நிறைந்த காவல் நிலையங்களின் பட்டியலில் அரியமங்கலம், பொன்மலை காவல் நிலையங்கள் முன்னிலையில் உள்ளனர். இந்தப்பகுதியில் இரு பெரும் ரவுடி கும்பல்களால் வருடம் தோறும் கொலை, கொள்ளை நடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் ரவுடி கும்பல் ஒன்று வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.

இந்த பகுதியில் இரு ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதில் ஒரு ரவுடி அவரது எதிரியை தீர்த்து கட்ட அந்த வெடிகுண்டுகளை வாங்கி வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திடீர் நகரை சேர்ந்த பிரபல ரவுடியான குட்ட பாலு என்பவர் தனது உபயோகத்திற்காக நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து முள்ளுக்காட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

publive-image

மேலும், ரவுடி குட்டபாலு வேறு ஒரு ரவுடி ஒருவரை மிரட்டுவதற்காகவும், பல்வேறு அடிதடி, கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடை அதிமுக பிரமுகர் ஒருவரின் மகனுக்கும் இந்த வெடிகுண்டில் தொடர்பிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து குட்ட பாலு மீது போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் ரவுடியை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பொன்மலை, அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

publive-image

திருச்சியில் இரண்டு ரவுடிக்கும்பல் ஒருவரையொருவர் அவ்வப்போது தாக்கி அழித்துக்கொண்டிருக்கும் பகுதியாகவே இருக்கும் அரியமங்கலம் திடீர்நகர் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கும் பிரபல ரவுடிகள் தஞ்சமடைவதும், பின் சிறை சென்று வருவதும் சர்வசாதாரணமான நிகழ்வாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment