Advertisment

ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல் - திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கான வழிகாட்டு நிறிமுறைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Trichy collector

ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்துவதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும். 

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது அதில் கலந்து கொள்ளும் காளைகளின் அனைத்து விவரங்களும் வலைதளம் மூலம் பதிவுகள் (Online Token Registration) மேற்கொண்டு வில்லைகள் பெற்றுக் கொண்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். இதனை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் பிப்ரவரி 2025 முதல் நடைபெறவுள்ள அனைத்து ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் காளைகளின் விவரங்களை, www.tiruchirappalli.nic.in என்ற வலைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trichy Jallikattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment