/indian-express-tamil/media/media_files/2025/08/16/trichy-police-2025-08-16-14-10-00.jpg)
Trichy
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி, பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் மீது கொள்ளிடம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டதும், அதிவேகமாகச் சென்ற இந்த மாணவர்கள், தப்பிக்க முயன்றுள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பயணம் செய்ததால், இந்த மாணவர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற மூன்று கல்லூரி மாணவர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் நேரில் அழைத்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்...#Trichypic.twitter.com/kvfPNe3tOz
— Indian Express Tamil (@IeTamil) August 16, 2025
அங்கு, காவல் கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு மிகவும் பொறுமையாகவும், அக்கறையோடும் அறிவுரைகளை வழங்கினார். அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் கடுமையான சாலை விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்புகள், மற்றும் எதிர்கால இழப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஒரு நொடி வேகத்திற்காக, வாழ்நாள் முழுவதையும் இழக்கும் அபாயம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் செயல், வெறும் அபராதம் விதிப்பதோ அல்லது வழக்குப் பதிவு செய்வதோ அல்லாமல், இளைஞர்களிடம் பொறுப்புணர்வை விதைக்கும் ஒரு சிறந்த முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.