scorecardresearch

கோடை வெப்பத்தை தணிக்க காவலர்களுக்கு பழச்சாறு வழங்கிய காவல் ஆணையர்

கோடைக் காலங்களில் போக்குவரத்து காவலர்கள் தங்களது உடல்நலனை பேணிக்காத்திட அறிவுரைகள் வழங்கினார்.

Trichy
Trichy commissioner sathyapriya

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா எதிர்வரும் கோடை காலங்களில், திருச்சி மாநகர காவலர்களின் உடல்நலம், ஆரோக்கியத்தை காத்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அதன்படி, தஞ்சாவூர் ரோடு பால்பண்ணை ஜங்சனில் உள்ள போக்குவரத்து சந்திப்பில் பணிபுரியும்  போக்குவரத்து காவலர்கள் கோடை காலங்களில் பணிபுரியும்போது சோர்வடையாமலும், புத்துணர்ச்சியுடன் பணிபுரியும் வகையில் பழச்சாறு மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சியை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா தொடங்கி வைத்தார்.

மேலும் கோடைக் காலங்களில் போக்குவரத்து காவலர்கள் தங்களது உடல்நலனை பேணிக்காத்திட அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு,  போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கோடை காலம் முழுவதும் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு மற்றும் குளிர்பானம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா தெரிவித்தார்.

க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy commissioner sathyapriya given fruit juice to city cops

Best of Express