திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பிரதமர் மோடியின் திருச்சி வருகையைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே நடைபெற்றது. ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படுவதாகவும், சிறுபான்மையினர், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஒடுக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டின் நலன்களும், நிதிகளும் மறுக்கப்படுவதாகவும் கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான எல். ரெக்ஸ் அறிவுறுத்தலின்படி, மாவட்ட பொருளாளர் முரளி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலங்காரம், ஷேக் தாவுத், கோட்ட தலைவர்கள் பகதுர்ஷா (மார்க்கெட் கோட்டம்), வெங்கடேஷ் காந்தி (மலைக்கோட்டை கோட்டம்), பிரியங்கா (ஜங்ஷன் கோட்டம்), அழகர் (அரியமங்கலம் கோட்டம்), ஜெயம் கோபி (ஸ்ரீரங்கம் கோட்டம்), எட்வின் (சுப்பிரமணியப்புரம் கோட்டம்), மற்றும் அணி தலைவர்களான ராஜசேகர் (முன்னாள் ராணுவப் பிரிவு), அண்ணாதுரை (விவசாயப் பிரிவு), விஜய் பட்டேல் (இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்), அஞ்சு, ஷீலா செலஸ், கவிதா நாச்சியார் (மகிளா காங்கிரஸ்), பஜார் மொய்தின் (சிறுபான்மைப் பிரிவு), கிளமெண்ட் (ஆர்டிஐ பிரிவு), பத்பநாதன் (இலக்கியப் பிரிவு) உட்படப் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.